கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்
காரியாபட்டி அருகே குரண்டி கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை உயிருடன் மாட்டை தீயணைப்புத் துறையினர்; கயிறு அவிழ்த்தவுடன் துள்ளி குதித்து ஓடிய பசுமாடு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே குரண்டி கிராமத்தில் பால்கோனார் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த விவசாய கிணற்றில் இன்று அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று தவறி விழுந்துள்ளது.
இதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக காரியாபட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் குதித்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கயிறு கட்டி கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
கிணற்றில் இருந்து வெளியே வந்த மாடு கயிறை அவிழ்த்தவுடன் துள்ளி குதித்து அங்கிருந்து ஓடியது. கிணற்றில் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியது.