நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய அரசு அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு, நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 69 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அறுவடை பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் கடந்த வாரம் பெய்த பருவம் தவறிய மழை பனிப்பொழிவு காரணமாக அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும் விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நெல்லின் ஈரப்பத அளவை அதிகரித்து அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை ஏற்ற தமிழக அரசு நெல்லின் ஈரப்பதத்தை
17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இதையடுத்து நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குனர்கள் நவீன், ப்ரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகிய 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங் களில் நெல்லின் ஈரப்பதம் மற்றும் சீதோஷ்ண நிலை குறித்து ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிளையாட்டம் மேமாத்தூர் கீழ்மாத்தூர் ஆத்துக்குடி சேமங்கலம் வள்ளுவர் குடி கொண்டல் இளந்தோப்பு மணல்மேடு ஆகிய ஊர்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர். கலெக்டர். இந்த குழுவினருடன் தமிழ்நாடு. நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் வந்தனர்.
அப்போது அதிகாரிகளிடம் பேசிய விவசாயிகள், பருவம் தப்பிய மழை காரணமாக கடுமையாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுந்தனர்.