Nomination….னில் இருந்து தூக்கி எரிய பட்ட கங்குவா
மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் கங்குவா, இப்படத்தில் சூர்யா, திஷாபதாணி, யோகி பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்தனர்.
இப்படம் திரையரங்கில் படுதோல்வி அடைந்ததால் ஓடிடியில் வெளியானது இப்படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் தான் படத்தின் தோல்விக்கு காரணம் என்று சர்ச்சைகள் வெளியானதால் இரண்டாம் பாகத்தை சிறுத்தை சிவா மிகுந்த கவனத்தோடு இயக்கி வருகிறாராம்.
பத்து வருடங்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து தன்னை வருத்தி நடித்த சூர்யாவுக்கு பேரிடியாக கங்குவா அமைந்ததால், நடித்து கொண்டிருக்கும் RJ பாலாஜி படத்தை பெருதும் நம்பி இருக்கிறார் சூர்யா.
இங்க வேகாத பப்பை அங்க போய் வேக வைக்க முடியுமா…இன்னு சிறுத்தை சிவா அடிபோட்டு, கங்குவா படத்தின் நிகழ்கால போர்ஷனை மட்டும் ஒரு திரை கதையாக உருவாக்கி ஆஸ்காருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் நாமினேஷன் லிஸ்டில் கங்குவா படம் இடம்பெறவில்லை .
குட்டு வாங்கிய கங்குவா படத்தை இணையவாசிகள் நாங்க அப்பவே சொன்னோமில்ல ஏன் அனுப்பி பல்பு வாங்கினீங்க….இது தேவையா…? அப்படின்னு மரண கலாய்ப்பு கலாய்த்து வருகின்றனர்.