Race…..சில் எனக்கு என்ன வேணா நடக்கலாம்…அஜீத்
அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த மகிழ்ச்சியான நாள் விரைவில் வரப்போகிறது ஆம் பிப்ரவரி ஆறாம் தேதி நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் திர்ஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோ நடிப்பில் அனிருத்தின் கலக்கல் இசையில் விரைவில் திரையில் வெளி வருகிறது விடாமுயற்சி.
இப்படத்தின் உரிமையை Red Gaint மூவிஸ் கைப்பற்றி இருக்கிறது. அன்மையில் மகிழ் திருமேனி கொடுத்த பேட்டியில் அஜித் கூறிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டு ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார்.
அதாவது அஜித் துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்து கொள்ள இருந்தார் ஆனால் Trail Race…சில் அதிர்ஷ்டவசமாக தப்பியதால் அந்த போட்டியில் அவரால் பங்கு கொள்ள இயலவில்லை ஆனால் அவரது அணி மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றது.
அஜித் அந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு இயக்குனரை அழைத்து ரேசில் நான் கலந்து கொள்வதற்கு முன்பாக பட வேலைகள் அனைத்தையும் முடித்து விடுங்கள் ஏனென்றால் நான் ரேசில் கலந்து கொள்ளும் பொழுது எனக்கு எது வேணா நடக்கலாம் நான் 100% ஆக்சிலேட்டரை அழுத்த வேண்டும் 90% அழுத்தி விளையாட நான் விரும்பவில்லை எனக்கு அந்த வேலை இருக்கிறது இந்த வேலை இருக்கிறது என்று என்னால் யோசித்து நிதானமாக கார் ஓட்ட முடியாது என்று கூறியதைக் கேட்டதும் நான் ஷாக் ஆகிவிட்டென் என்று மகிழ்திருமேனி கூறினார்.