ஆலியா…வீட்டில் இருந்து ஷூட்டிங் ….. சண்டை போட்டாங்க
சின்னதிரை நடிகர்களான Sweet Lovable Couple ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தங்கள் காதல் அனுபவம் பற்றி சமிபத்திய பேட்டியில் கூறிய சுவாரசியமான காதல் ட்விஸ்ட்…டை இந்த பதிவில் பார்போம்.
எல்லோருக்கும் மோதலில் தான் காதல் உருவாகும்.. ஆனால் இவர்கள் கதையில் உள்டாவாகி காதல் மோதலில் முடிந்திருகிறது. நானும் ஆலியாவும் ராஜா ராணி சீரியலில் நடிக்கும் பொழுது காதலிக்க ஆரம்பித்தோம் திடீரென்று எங்களுக்குள் ஏற்பட்ட பிரேக் அப் ஆல் பிரச்சினை பெருசாகி ஆலியா ஒரு வாரம் அழுததால் வீசிங் வந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டார்.
அவர்கள் வீட்டில் இருந்து எல்லோரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து என்னிடம் சண்டை போட்டனர். அந்த பிரச்சனைக்கு பிறகு ராஜா ராணி சீரியலில் இருந்து என்னை தூக்கி விட்டு எனக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க ப்ரொடக்ஷன் தரப்பு வேளையில் இறங்கியது.
என் கண் எதிரே எல்லோரும் ஆடிஷ…னுக்கு’ செல்லும்போது எனக்கு கஷ்டமாக இருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு ஆலியா மனசு மாரி நாம் ஏன் இன்னொருவர் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் அவரே நடிக்கட்டும் என்று எனக்கு திரும்பவும் சான்ஸ் வாங்கி கொடுத்தார்.
ஆனால் ஷூட்டிங் முடிந்ததும் அவர் ரூமுக்கு சென்று விடுவார் நான் என்னுடைய ரூமுக்கு சென்று விடுவேன் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசாமலேயே நடித்தோம் பத்து நாட்கள் கழித்த பிறகு ஆலியாவால் என்னிடம் பேசாமல் இருக்க முடியவில்லை ஒருவரை தூது அனுப்பி என்னிடம் பேச சொன்னார்.
அதன் பிறகு நானும் அவரிடம் பேசினேன் எங்கள் காதல் சண்டையும் ஓய்ந்து கல்யாணத்தில் முடிந்தது. இப்பொழுது நாங்கள் மனம் ஒத்த காதல் தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சஞ்சீவ் கூறினார்.