செல்லத்தம்மன் திருக்கோவில் தை மாத திருவிழா – திரளான பக்தர்கள் தரிசனம்
மதுரை சிம்மக்கல் அருகே உள்ள செல்லத்தம்மன் திருக்கோவில் தை மாத திருவிழா – திரளான பக்தர்கள் தரிசனம்
முற்காலத்தில் மணவூரை தலைநகராக கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த குலசேகர பாண்டிய மன்னரால் சிவபெருமானின் ஆணைப்படி கடம்பவனாக காட்டை திருத்தி மதுரை மாநகர அமைக்கப்பட்டது.
அம்மன்னரால் வடக்கு திசையில் காவல் தெய்வமான காளி தேவி திருக்கோவில் அமைக்கப்பட்டது. அந்த காளி தேவி பிற்காலத்தில் செல்லி என்றும் செல்லத்தம்மன் என்றும் அழைக்கப்பட்டார். இத்தகைய பெருமை வாய்ந்த செல்லத்தம்மன் திருக்கோவிலில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ளது
இக்கோயிலில் தை மாத திருவிழா 19ம் தேதி துவங்கி நடைப்பெற்று வருகிறது. 5ம் திருவிழாவான இன்று செல்லத்தம்மனுக்கு, சந்தனம், பால், தேன், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம், நெய், திரவியம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரணை கட்டப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
கோவிலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் நடைப்பெற்றது.
29 ஆம் தேதி வரை நடைபெறும் இத்திருவிழாவில் முக்கிய திருவிழா 27ம் தேதி காலையில் செல்லத்தம்மனுக்கு பாலாபிஷேகமும் இரவு 9மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேசர் திருக்கோவில் வைத்து பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.