என்னை யாராலும் ஏமாற்ற முடியாது
குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய புகைப்படங்களை வைத்து மோசடி செய்வதாக சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் நான் ஒரு நடிகன் என்பதால் என்னிடம் பல பேர் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள் என்னுடைய புகைப்படத்தை வைத்துக்கொண்டு யார் உங்களை அணுகினாலும் அவர்களிடம் கவனமாக இருங்கள்.
ஒரு முறை கன்னடா செல்வம் என்று ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை வைத்து படம் தயாரிப்பதாகவும் ஒருவரின் சிபாரிசு பேரில் என்னிடம் வந்திருப்பதாகவும் கூறி என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றார்.
அதன் பிறகு அவர் படம் எதுவும் தயாரிக்கவில்லை எட்டு வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் சமீபத்தில் அதே நபர் வேறொரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை அணுகி என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி தன்னை ஸ்டாலின் என்று கூறி அவர்களுடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது எனக்கு தெரிய வந்தது, என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்து பலரிடம் கதை சொல்லி யாரையும் ஏமாற்ற முடியாது அதற்காக தான் இந்த பதிவு என்று கூறியுள்ளார் நடிகர் ராஜ்கிரண்.