உடல் உறுப்புகளை தானம் செய்த இசையமைப்பாளர் டி. இமான்
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது உடல் உறுப்புகளை தானம் செய்து தனது பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடினார்.
இந்த தானம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், அவர் தனது பிறந்தநாளில் அதை அறிவித்தார்.
இமாம் அது குறித்து வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் எனது பிறந்தநாளில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் முழு உடலையும் தானம் செய்வதற்கான சான்றிதழை பெற்றிருக்கிறேன் எனக்குப் பிறகு என் உறுப்புகள் மூலம் யாராவது ஒருவர் பயனடைந்தால் எனக்கு மகிழ்ச்சியே உறுப்பு தானம் மூலம், நம் காலத்திற்குப் பிறகும் இந்த மண்ணில் நம்மால் வாழ முடியும்.
உறுப்புகளுக்காக நிறைய பேர் வருட கணக்கு காத்திருக்கின்றனர் எனவே உறுப்பு தானம் தானம் செய்யும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியைக் கொண்டுவர வேண்டும் என்று நான் விரும்பினேன்.
இந்த யோசனை நீண்ட காலமாக என் மனதில் இருந்து வருகிறது. இப்போதுதான் சரியான தருணம் என்று உணர்ந்தேன், நீங்கள் மட்டும் இன்றி உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் இது குறித்து சொல்லுங்கள் எனது உடல் உறுப்பு தானம் மற்றவர்களுக்கு தூண்டுதலாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார்.