in

பேரணி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோயில் திருக்கல்யாண உற்சவம்

பேரணி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோயில் திருக்கல்யாண உற்சவம்

 

பேரணி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோயிலில் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பேரணி கிராமம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் திருக்கோயிலில் தை மாத வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு மங்களப் பொருட்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் பக்தர்களால் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன.

தொடர்ந்து மணமக்களாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம், கலச பூஜ, காப்பு கட்டு வைபவம், ஆகியவை நடைபெற்றன தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி தயாரகளுக்கு மங்கள நாண் அணிவிக்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து வைணவ முறைப்படி திருமண சடங்குகள் செய்யப்பட்டு திருக்கல்யாணம் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

சினிமாவை விட்டு விலகினால் சந்தோஷம்… ராஷ்மிகா

நத்தப்பள்ளம் ஊராட்சியில் 700 ஏக்கர் சம்பா நெற்பெயர்கள் வயலில் சாய்ந்து சேதம்