நத்தப்பள்ளம் ஊராட்சியில் 700 ஏக்கர் சம்பா நெற்பெயர்கள் வயலில் சாய்ந்து சேதம்
திருக்குவளை அருகே நத்தப்பள்ளம் ஊராட்சியில் 700 ஏக்கர் சம்பா நெற்பெயர்கள் வயலில் சாய்ந்து சேதம்; மழை பெய்து ஒரு வாரம் ஆகியும் மழைநீர் வடியாததால் முளைத்த நெல்மணிகள்; அறுவடை இயந்திரம் தட்டுப்பாடல் விவசாயிகள் அவதி ; அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா நத்தப்பள்ளம் ஊராட்சி செம்பியவேளூர் கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் ஒருபோக சாகுபடியாக சம்பா சாகுபடி விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக பெய்த கனமழையால் சம்பா சாகுபடி முற்றிலுமாக வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது இருப்பினும் மழை விட்டு ஒரு வார காலங்கள் ஆகியும் இதுவரை மழை நீர் வடியாததால் நெல்மணிகள் வயலிலேயே முளைக்கத் தொடங்கிவிட்டது.
கடனுக்கு உரம் வாங்கி, அரசு மற்றும் தனியார் வங்கியில் கடன் பெற்றும் (தங்க நகையை விற்று பூமியில் போட்டு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் செலவு செய்து அறுவடை செய்யக்கூடிய நேரத்தில் பெய்த மழையால் முற்றிலுமாக முளைத்து அழுகத் தொடங்கிவிட்டது.)
AV video மீதமுள்ள நெல்மணிகளையாவது கரை சேர்த்து விடலாம் என எண்ணி அறுவடை இயந்திரங்களுக்காக விவசாயிகள் காத்திருந்தாலும் இதுவரை இயந்திரம் கிடைக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் முழி பிதுங்கி உள்ளனர்.
அறுவடை நேரத்தில் அனைத்தையும் இழந்து தவிக்கும் விவசாயிகளை இதுவரை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகம் சார்பில் யாரும் வந்து பார்க்காதது அவர்களுக்கு கூடுதல் வேதனை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே அதிகாரிகள் உடனடயாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட இடங்களை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் எனவும் மேலும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்துள்ளார்.