தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 76 வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டவர் தியாகிகளுக்கு கதராடை அணிவித்து கெளரவித்தார்:
நாட்டின் 76 வது குடியரசு தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார்
தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் சமாதான புறாக்களை பறக்கவிட்டவர்
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார்.
பின்னர் காவல்துறையை சேர்ந்த 57 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சிறப்பாக பணியாற்றிய 8 பேருக்கு சான்றிதழ்களை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.2.29 கோடி மதிப்பில் நல திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
நிகழ்ச்சியில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், தஞ்சை எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், மேயர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்