நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் தை அமாவாசை பத்ர தீப திருவிழா
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் தை அமாவாசை பத்ர தீப திருவிழா தொடக்கம். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் மாவட்டங்களில் புராதன சிறப்புமிக்க அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததாகும்.
முன்னொரு காலத்தில் வேத சர்மா இறைவனுக்கு திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல் மழையினால் நனையாத படி வேலியிட்டுக் காத்த இறைவன் நெல்வேலி நாதா் என சிறப்பு பெயா் பெற்று ஊருக்கு திருநெல்வேலி என பெயா் வரக்காரணமானவா்.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அருள்மிகு காந்திமதிஅம்பாள் உடனுறை நெல்லையப்பா் திருக்கோவிலில் தை அமாவசை திருவிழா 3 தினங்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பத்திர தீபத் திருவிழா இன்று காலை தொடங்கியது.
இதற்காக அதிகாலையில் திருக்கோயில் நடை திற்ககப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி சன்னதி மகா மண்டபத்தில் கும்பங்கள் பிரதிஷ்டை செய்து யாகம் வளா்த்து ருத்ரஜப பாராயணம் நடைபெற்று பூா்ணாகுதி நடைபெற்றது.
அம்பாள் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அன்னை காந்திமதி உடனுறை சுவாமி நெல்லையப்பருக்கு மாபொடி மஞ்சள் வாசனைபொடி பால் தயிா் பஞ்சாமிருதம் தேன் அளநீா் அன்னம் வீபூதி சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், நெல்லை கோவிந்தா், ஆறுமுகா் என அனைத்து மூலஸ்தானத்திற்கும் கும்பஅபிஷேமம், மூலலிங்கத்திற்கக 108 சங்குாபிஷேகமும் தீபாராதனைகள் நடைபெற்றது.
மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் சா்வ அலங்காரத்தில் காட்சி கொடுத்த சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்க சோடச உபசாரனைகளுடன் மகா தீபாராதனைகள் காட்டப்பட்டது.
விழாவில் 2ம் நாளான நாளை மாலை தங்க விளக்கு ஏற்றும் நிகழ்வும் அதனை தொடா்ந்து வருகின்ற 29 ம்தேதி தை அம்மாவாசை அன்று பத்ர தீபத்திருவிழாவும் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தாிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினா் மற்றும் அறங்காவல் குழுவினா் செய்திருந்தனா்.