ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலைப்பட்டியல் ஒட்டாததால் விவசாயிகள் சாலை மறியல்
செஞ்சி திண்டிவனம் சாலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலைப்பட்டியல் ஒட்டாததால் விவசாயிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மதியம் ஒரு மணிக்குள் கொள்முதல் செய்யப்படும் நெல் மற்றும் மணிலா உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கு விலைப்பட்டியல் ஓட்டுவது வழக்கம்.
இன்று மாலை மூன்று மணி வரை விலைப்பட்டியல் ஒட்டாததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கிருஷ்ணகிரி பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
இதனைத் தொடர்ந்து செஞ்சி காவல்துறையினர் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது விலைப்பட்டியல் ஒட்டாமல் 12 ஆயிரம் நெல் மூட்டைகளை எடை போடுவதாக குற்றம் சாட்டி சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளரிடம் கேட்ட பொழுது தமிழ்நாடு முழுவதும் சர்வரில் ஏற்பட்ட கோளாறால் விலைப்பட்டியல் ஓட்டுவதில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் கொடுத்தார்.