நாமக்கல் பாண்டமங்கலம் பெருமாள் ஆலய தைத்திருதேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் தை மாத திருத்தேர் பெருவிழா-2025ஐ முன்னிட்டு இன்று 12.30 மணிக்கு கொடியேற்ற வைபவத்துடன் முதல் நிகழ்வு சிறப்பாக துவங்கி நடைபெற்றது.
அப்போது கருடன் வரையப்பட்ட கொடி திருக்கோவில் சுற்றி வந்து கோவில் முன் உள்ள கொடிக்கம்பத்தில் கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் திருக் கொடி ஏற்றப்பட்டது பின் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.
பின்னர் சுவாமி பல்லாக்கில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஜனவரி 27 அன்று அன்னவாகம், 28 சிம்ம வாகனம், 29 அனுமந்த வாகனம், 30 பெரிய திருவருடி சேவை, 31 சேஷ வாகனம், பிப்ரவரி 1 யானை வாகனம், 2 ந்தேதி திருக்கல்யாணம் புஷ்ப வாகனம், 3 குதிரைவாகனம், 4 ந்தேதி அதிகாலை 4 – 30 – 5.30 சுவாமி திருத்தேர் எழுந்தருளல் மாலை 4.30 திருத்தேர் திருவீதி உலா, 5ந் தேதி தீர்த்தவாரி, 6ந்தேதி வசந்த உற்சவம், 7ந்தேதி புஷ்ப யாகம், 8ந்தேதி கருட வாகன புறப்பாடு, நிகழ்வுடன் நிறைவு பெருகின்றன எனவேபக்த கோடிகள் பெருமாளை தேர்திருவிழாவில் தினமும் தரிசிக்க கேட்டுக் கொள்கின்றனர்.