in ,

விருதுநகரில் சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

விருதுநகரில் சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

 

விருதுநகரில் சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர். தலைக்கவசம் அணியாதவர்களுக்கு தலைக்கவசம் வழங்கியும் அபராதம் விதித்தும் அறிவுரை வழங்கிய ஆட்சியர்

நாடு முழுவதும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் 31 வரை சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு போக்குவரத்து துறை நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விருதுநகரில் சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு ஆர்டிஓ அலுவலகம் முன்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

பின்னர் தலைக்கவசம் அணிந்து வராதவர்களுக்கு புதிதாக தலைக்கவசம் வழங்கியும் அதற்கு அபராதமும் விதித்து மாவட்ட ஆட்சியர் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

இந்தப் பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்திய படியும் ஏராளமான சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

ஒன்றை வருடங்களுக்கு முன்பு காணாமல் போன முதியவர் குடும்பத்தினரிடம் சேர்ப்பு

கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம்