in

மூவாநல்லூர் ஊராட்சியை மன்னார்குடி நகராட்சியுடன் இணைக்க கூடாது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மூவாநல்லூர் ஊராட்சியை மன்னார்குடி நகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மன்னார்குடி நகராட்சியை விரிவுபடுத்துவதற்காக அதனைச் சுற்றியுள்ள மூவாநல்லூர், நெடுவாக்கோட்டை, அசேஷம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளை நகராட்சியுடன் தமிழ்நாடு அரசு இணைத்துள்ளது.

இதில் ஊராட்சிகளை நகராட்சியோடு இணைப்பதால் கிராம மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள்,விவசாயம், 100 நாள் வேலை பாதிப்பதோடு வரி ஏற்றமும் என ஏற்படும் என குற்றம் சாட்டி நகராட்சியோடு இணைக்ககூடாது என போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மூவாநல்லூர் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்களது ஊராட்சியை மன்னார்குடி நகராட்சியோடு இணைக்க கூடாது என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தங்களது ஊராட்சி மன்னார்குடி நகராட்சியில் இருந்து தொலைவில் உள்ள.நிலையில் நகராட்சியோடு இணைப்பது முறையாக இருக்காது எனவும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், எனவே இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

What do you think?

கலைஞரின் தாயார் நினைவிடத்தில் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் கலைஞரின் உறவினர்கள் மரியாதை செலுத்தினர்

திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.