திருத்துறைப்பூண்டியில் 2.5 வயது குழந்தை அடையாளம் கண்டு நினைவுபடுத்தல் திறனில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் சாதனையாளர் விருது பெற்று அசத்தல்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்பகுதிக்குட்பட்ட மன்னைசாலையில் வசிக்கும் கிளிண்டன் , மான்சிமரியா தம்பதியரின்
இரண்டரை வயது மகள் யுஸிவா பிறந்த 6 மாத குழந்தையிலிருந்து விளையாட்டு பொருட்களின் மீது ஆர்வம் குறைந்து புத்தகத்தின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது .
டிவியில் ஒளிபரப்பாகும் கார்ட்டூன்களை பார்த்து அதில் வரும் கதாபாத்திரங்கள் யானை , குதிரை, பழ வகைகள் மற்றும் வாகனங்களை பெயர்களை அதனை யுஸிவா திறம்பட கூறியுள்ளார். சிறுகுழந்தைகள் படித்து பழகுவதற்காக உள்ள படத்துடன் கூடிய எழுத்து அட்டைகளை வாங்கி பேசுவதற்கு பெற்றோர்கள் பழக்கப்படுத்தி உள்ளனர் .
நாளடைவில் குழந்தை யுஸிவா அடையாளம் கண்டு நினைவு படுத்தி அதன் பெயர்களை வரிசையாக சொல்லி உள்ளார் . உடனடியாக பெற்றோர்கள் ஹரியானா பரிதாபாத்தில் உள்ள இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் .
அவர்கள் பெற்றோர்கள் மற்றும் குழந்தையை வரவழைத்து குழந்தை யூஸிவாவின் அடையாளம் கண்டு நினைவுபடுத்தல் திறனை சோதித்துள்ளனர் .
அவர் இரண்டு நிமிடம் 30 வினாடியில் 18 விலங்கினங்கள் பெயர்களையும் , 13 பழங்களின் பெயர்களையும் , 8 வாகனங்களின் பெயர்களையும் , 5
பறவைகளின் பெயர்களையும் , 5 எலக்ட்ரானிக் சாதனங்களின் பெயர்களையும் 5 சமையலறை உபகரணங்கள் பெயர்களையும் 26 இதர வகைபெயர்களையும் கூறி அசத்தியுள்ளார் .
குழந்தை யுஸிவாவின் அடையாளம் கண்டு நினைவுபடுத்தல் திறனை பாராட்டி குழந்தை யுஸிவாவிற்கு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட் 2025 சாதனையாளர் விருதுகளையும் பதக்கத்தையும் அதற்கான சான்றிதழையும் வழங்கி பாராட்டியுள்ளது .
இளம் பிஞ்சு வயதிலேயே தனது குழந்தை யுஸிவா நினைவு திறனை வளர்த்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் சாதனையாளர் விருது வாங்கியதை தொடர்ந்து பெற்றோர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் .