in

தை அம்மாவாசையை முன்னிட்டு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

தை அம்மாவாசையை முன்னிட்டு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

 

அனுமன் சாலிசா பாடல்களை பாடி பக்தர்கள் மனம் உருகி வழிபாடு

ராமநாதபுரம் தேவிபட்டினம் சாலையில் ஐயப்பன் ஆலயத்தில் தனி சன்னதியில் அருள்தரும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமிக்கு தை அமாவாசையை முன்னிட்டு அம்மாவாசை திதியில் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு அம்மாவாசை தினமும் சிறப்பு யாகம் நடத்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது வழக்கம்.

முன்னதாக பக்தர்கள் துதி பாடவே மங்கல இசையுடன் சிறப்பு யாகசாலை நடத்தப்பட்டு பூர்ணா குதி சமர்ப்பிக்கப்பட்டு பின் ஆஞ்சநேயருக்கு பூஜிக்கப்பட்ட புனித நீராலும் பதினொன்று வகையான திவ்ய திரவியங்களாலும் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் கற்பூர ஆரத்தி மங்கல தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு எலுமிச்சை மலர் மாலைகளுடன் பக்தர்களுக்கு விசேஷ அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமியை சுற்றுவட்டார பகுதியில் இருந்து பலரும் கண்டு மனம் உருகி வழிபாடு செய்தனர்.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதமும் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பட்டினை ஆலய நிர்வாகி மணிபாரதி சிறப்பாக செய்திருந்தார்.

What do you think?

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்