தை அமாவாசை பத்ர தீப திருவிழா தங்க விளக்கில் தீபம் தரிசனம்
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் தை அமாவாசை பத்ர தீப திருவிழாவின் 2ம் நாள் சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் தங்க விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் மாவட்டங்களில் புராதன சிறப்புமிக்க அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததாகும்.
முன்னொரு காலத்தில் வேத சர்மா இறைவனுக்கு திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல் மழையினால் நனையாத படி வேலியிட்டுக் காத்த இறைவன் நெல்வேலி நாதா் என சிறப்பு பெயா் பெற்று ஊருக்கு திருநெல்வேலி என பெயா் வரக்காரணமானவா்.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அருள்மிகு காந்திமதிஅம்பாள் உடனுறை நெல்லையப்பா் திருக்கோவிலில் தை அமாவசை திருவிழா 3 தினங்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பத்திர தீபத் திருவிழா நேற்று காலை தொடங்கியது.
2வது நாளான இன்று அதிகாலையில் திருக்கோயில் நடை திற்ககப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி சன்னதி மகா மண்டபத்தில் கும்ப பூஜை, ஹோமம் ருத்ரஜப பாராயணம் நடைபெற்று பூா்ணாகுதி நடைபெற்றது. அம்பாள் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அன்னை காந்திமதி உடனுறை சுவாமி நெல்லையப்பருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் தங்க விளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
முதலில் தங்க விளக்கை கணபதி முன் பூஜித்து அதை மூலஸ்தானத்திற்கு எடுத்து சென்றனா். அங்கு சுவாமி நெல்லையப்பாிடம் அனுமதி பெற்று தங்க விளக்கினை ஏற்றி சுவாமி கோயில் முன் அமைந்துள்ள மணி மண்டபத்திற்கு நாதஸ்வரதம் பஞ்சவாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டு வந்தனா்.
மலா்களால் அலங்காிக்கப்பட்ட மேடையில் தங்க விளக்கும்,உப விளக்குகளும் வைக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. தங்கவிளக்கின் மஹாதீபத்தில் இருந்து தை அமாவாசை அன்று சுவாமி கோவில் தங்க கொடிமரம் முன்பு நந்தி தீபம் ஏற்றப்படும். அதனை தொடர்ந்து கோவில் முழுதும் பத்தாயிரம் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படும். இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதி புறப்பாடு நடைபெறுகின்றது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.