in

 வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மையம் துவக்கம்

 வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மையம் துவக்கம்

 

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மையம் இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மையத்தினை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

தொடர்ந்து., சிறப்புரை ஆற்றியவர் பொதுமக்களிடம் பேசுகையில்.

நான் தமிழ்ல பேசுறேன் சார்., TAX கட்டணும் என்றால் யாரை சென்று பார்க்க வேண்டும் என்பதை எழுமையாக கொடுத்துள்ளது. மேலும், பான் கார்டு பதியும் போது அல்லது Tax தொடர்பான அறிக்கைகள் அனைத்திற்கும் வெப்சைட்டில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் உள்ளது.

தமிழில் இல்லாததால் யாருக்கும் புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது எல்லோருக்கும் புரிய கூடிய மொழில் இருந்தால் நன்றாக இருக்கும்.

கஷ்டப்பட்டு Tax கட்டுகிறோம் எங்களுக்கு ஏதாவது பெனிபிட் வேண்டும் சார் இதை கோரிக்கையாக வைக்கிறேன் தமிழ் தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சியை துவக்கியதற்கு நன்றி என கூறினார்.

What do you think?

புஷ்ப மண்டப படித்துறை காவேரி ஆற்றில் இருந்து ஐந்து யானைகளை கொண்டு தீர்த்தம் எடுத்துவரப்பட்டன

மதுரையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் பேட்டி