in

அத்தி மரத்தினால் 14 அடி உயரத்தில் மூலவர் வானமுட்டி பெருமாள் ஆலய பிரம்மோற்சவ தேர் திருவிழா

அத்தி மரத்தினால் 14 அடி உயரத்தில் மூலவர் வானமுட்டி பெருமாள் ஆலய பிரம்மோற்சவ தேர் திருவிழா

 

மயிலாடுதுறை அருகே ஒரே அத்தி மரத்தினால் 14 அடி உயரத்தில் மூலவர் அமைந்துள்ள வானமுட்டி பெருமாள் ஆலய பிரம்மோற்சவ தேர் திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி என்ற கிராமத்தில் 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தில் அமைந்துள்ள வானமுட்டி பெருமாள் எனப்படும் சீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.

பிப்பல மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த இடமாகும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் காலத்து கட்டமைப்புடன் கூடிய இந்த ஆலயம் பித்ரு தோஷம் சனி தோஷம் நீங்கும் ஆலயமாகும். ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 25ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது பெருமாள் தாயார் உடன் திருத்தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் நான்கு ரத வீதிகள் வழியே தேரோட்டம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

விஜய் சேதுபதி மகளை…கமெண்ட் Section…னை ஆப் செய்த மக்கள் செல்வன்

தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு