மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து விலகிய நடிகை வினோதினி
மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து நடிகை வினோதினி விலகள். வருத்தப்படாத வாலிபர் சங்கம், கோமாளி, போன்ற படங்களில் நடித்தவர் வினோதினி வைத்தியநாதன்.
இவர் நகைச்சுவை மற்றும் குணசத்திர வேடங்களில் நடிப்பவர். 2023 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையக் கட்சியில் இணைந்தவர் தற்பொழுது அக்கட்சியில் இருந்து விலகுவதாக x..தலத்தில் வெளியிட்டுள்ளார்.
மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன் அரசியல் என்பது பெரிய கடல் ஆனால் என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே இருக்கிறது என்பதை காலம் கடந்து புரிந்திருக்கிறேன்.
கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளிலும் நான் கேள்வி கேட்டு இருக்கிறேன் பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு கிடைத்தது. கமலஹாசனை நேருக்கு நேராக கேள்வி கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.
ஆனால் அவற்றையெல்லாம் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை கமலஹாசன் போன்ற ஒரு மகத்தான தலைவனை தமிழ்நாடு மட்டுமல்ல நானும் கூட தவரவிட்டுவிட்டேன்.
கட்சியின் கடமையை தட்டிக் கழிக்கும் சோம்பேறி ஆகிவிட்டேன். இதை ஒத்துக் கொள்வதில் தவறில்லை என்று கூறியுள்ளார்…கமலே கட்சியை மறந்து நடிப்பு தயாரிப்பு என்று பிஸி…யாகிவிட்ட நிலையில், யாருமில்லாத கடையில் யாருக்கு டி ஆத்துர...இன்னு இவர் கட்சியில் இருந்து விலகியதை இணையவாசிகள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.