in

சாலை பாதுகாப்பு முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

 

செஞ்சியில் 36-வது சாலை பாதுகாப்பு முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் 36-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர்அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செஞ்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபதி கல்வி நிறுவனத்தின் தாளாளர் வழக்கறிஞர் ரங்க பூபதி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இதில் ஸ்ரீரங்க பூபதி கல்லூரி நிறுவனத்தின் கல்லூரி மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இப்பேரணி முக்கிய வீதிகள் காந்தி பஜார் பேருந்து நிலையம் வழியாக திருவண்ணாமலை சாலை, செஞ்சி நான்கு முனை சந்திப்பு, திண்டிவனம் சாலை வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

What do you think?

நஷ்டம்..ன்னு கேட்ட…உடனே பணம் கொடுத்த நெல்சன்

பட்ட பகலில் கோவில் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து திருடிய நபர், போலீசார் கைது