in

ஆபத்தை உருவாக்க காத்திருக்கும் தண்ணீர் தொட்டி நடவடிக்கை எடுப்பார்களா மாவட்ட அதிகாரிகள்

ஆபத்தை உருவாக்க காத்திருக்கும் தண்ணீர் தொட்டி நடவடிக்கை எடுப்பார்களா மாவட்ட அதிகாரிகள்

 

ஆபத்தை உருவாக்க காத்திருக்கும் தண்ணீர் தொட்டி பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுப்பார்களா மாவட்ட அதிகாரிகள்.

திண்டுக்கல் மாவட்டம் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் சொந்த தொகுதியான ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மலை பகுதியான மணலூர் ஊராட்சி கொங்கபட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மலை கிராமமான இப்பகுதியில் உள்ள மக்கள் விவசாயத்தையும் விவசாயக் கூலியாகவும் பணி செய்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக கடந்த பல வருடங்களுக்கு முன்பு ஊராட்சி ஒன்றியத்தால் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இந்த தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றனர்.

தொட்டி பழுதாகும் பொழுதெல்லாம் மாராமத்து பணிகள் மட்டும் தற்போது வரை நாலு முறை செய்து உள்ளனர்.

தற்போது மேல்நிலைத் தொட்டியின் நான்கு கான்கிரீட் கால்கள் முற்றிலுமாக பழுதாகி கம்பிகள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் தொட்டியும் முற்றிலுமாக பழுதாகிவிட்டது தண்ணீர் தொட்டி அருகே குடியிருப்புகள் உள்ளன அதேபோல் மாணவ மாணவிகள் விளையாடுவதும் முதியவர்கள் அனைவரும் தொட்டியின் அருகிலேயே அமர்வதும் பொதுமக்கள் சென்று வருவதும் என்ற சூழ்நிலை உள்ளது மேல்நிலைத் தொட்டி பழுதானது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தற்போது மேல்நிலைத் தொட்டி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் நிலை உள்ளது.

ஆகவே தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பழைய மேல்நிலைத் தொட்டியை முற்றிலுமாக இடித்துவிட்டு புதிய மேல்நிலைத் தொட்டி அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

What do you think?

பட்ட பகலில் கோவில் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து திருடிய நபர், போலீசார் கைது

இளையராஜா..வுக்கு ஆப்பு வைத்த ச ரி க ம நிறுவனம்