விஜய் …அஜித்து…க்கு ஏன் வாழ்த்து கூறவில்லை
அஜித் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் வெற்றி பெற்றதற்கும் பத்மபூஷன் விருது வாங்கியதற்கும் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவிக்கையில் விஜய் மட்டும் எந்த அறிக்கையும் வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சக நண்பரான அஜித்திற்கு வாழ்த்து கூற கூட விஜய்க்கு நேரமில்லையா என்று பலர் கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்துள்ளார்.
அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா …அஜித் சார் கார் ரேசில் வெற்றி பெற்ற போது விஜய் சார் தான் முதல் ஆளாக அவருக்கு போன் பண்ணி வாழ்த்து கூறினார்.
அதேபோல விருது அறிவிக்கப்பட்டதும் விஜய் சாரிடமிருந்து இருந்து தான் முதல் கால் வந்தது, அவர் வாழ்த்து கூறவில்லை என்று கூறுவது உண்மை இல்லை என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.