தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் மீண்டும் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்று சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடி தொழிலுக்காக சென்றனர். இவர்கள் மன்னர் மற்றும் இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை எல்லை தாண்ட விடாமல் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி மண்டபத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகு அதிலிருந்து பத்து மீனவர்களையும் சிறை பிடித்து விசாரணைக்காக மன்னர் துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மீனவர்கள் 10 பேரும் இலங்கை மீந்துற அதிகாரிகள் ஒப்படைக்கப்பட்டு பின்பு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக மீன்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மண்டபம் மீனவர்கள் கூறுகையில் தொடர்ந்து இலங்கை கடற்படை மீனவர்களையும் அவர்களது படல்களையும் சிறை பிடித்து வருவது மிகுந்த வேதனையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
இதனை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும் மீனவர்கள் பாரம்பரியமான இடத்தில் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மண்டபம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.