சித்தா….பட இயக்குனருக்கு திருமணம்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் பிப்ரவரி 2 ஆம் தேதி மதுரையில் நட்சத்திரங்கள் சூழ திருமணம் செய்து கொண்டார்.
இந்த விழாவில் சியான் விக்ரம், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, துஷாரா விஜயன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இயக்குனர் எஸ் யு அருண்குமார் பண்ணையாரும் பத்மினியும், சித்தா போன்ற படங்களை இயக்கியவர் மதுரையில் பிறந்தவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர்.
நாளைய இயக்குனர்கள் என்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர் வெற்றி பெற்று பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானார் அருண்குமார்.
முதல் படம் வெற்றி பெறாத நிலையில் சித்தார்த்தின் சித்தா…. அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
சியான் விக்ர மை வைத்து இவர் இயக்கும் வீர தீர சூரன் பாகம் 2, இந்த ஆண்டு மார்ச் 27 அன்று வெளியாகிறது, திருமணத்தில் கலந்து கொண்ட சியான் விக்ரம், சித்தார்த் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின், புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.