in

மரம் முறிந்து விழுந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி

மரம் முறிந்து விழுந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி

 

திண்டுக்கல்லில் மரம் முறிந்து விழுந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி

திண்டுக்கல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (46) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் கட்டிடங்களுக்கு பெயிண்டிங் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் ஒரு கட்டிடத்திற்கு பெயிண்டிங் அடித்து வரும் நிலையில் கட்டிட பணிக்காக உபகரணங்கள் வாங்க குணசேகரனும் அவரது சக தொழிலாளியான சேவியர் இருவரும் இரு இரு வாகனங்களில் வந்து கொண்டு இருக்கும் பொழுது ரவுண்ட் ரோடு சாலை சந்திப்பில் உள்ள புளிய மரம் திடீரென வேரோடு முறிந்து சாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் முன்னே சென்ற குணசேகரன் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குணசேகரன் பலியானார்.

இந்த விபத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சென்று குணசேகரனை மீட்கும் பணியில் ஈடுபட்ட பொழுது மரக்கிளைகளுக்குள் சிக்கி இருந்ததால் மீட்க முடியாமல் திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் குணசேகரனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முறிந்து விழுந்த மரத்தை தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மரம் உறிந்து விழுந்த விபத்தில் கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

சஞ்சீவ் விலகுகிறார்…. விரைவில் கயல் சீரியலுக்கு சுபம்

இயக்குனர் வெற்றிமாறன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாரா?