in

இயக்குனர் வெற்றிமாறன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாரா?

இயக்குனர் வெற்றிமாறன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாரா?

 

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, கட்சியின் தலைவர் விஜய் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2, 2025) சென்னையின் உள்ள பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் கட்சியின் சின்னங்களான சமூக சீர்திருத்தவாதி பெரியார் ஈ.வி. ராமசாமி, முன்னாள் முதல்வர் கே. காமராஜ், இந்திய அரசியலமைப்பின் தந்தை பி.ஆர். அம்பேத்கர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ராணி வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்தார்.

கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் உரையாற்றிய விஜய், கட்சியை வலுப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக வலியுறுத்தினார் “வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில், மக்கள் சக்தியுடன் இணைந்து, நமது பலத்தை தேசத்திற்குக் காட்ட வேண்டும், அரசியல் இலக்கை நோக்கி நீங்கள் அனைவரும் இன்றே செயல்படத் தொடங்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த ஒரு வருடத்தில் எவ்வளவோ விமர்சனங்களையும், ட்ரோல்களையும் பார்த்திருப்போம்? எந்த அவசரமும் பயமும் இல்லாமல், எங்கள் சித்தாந்தம் மற்றும் கொள்கையில் முழு நம்பிக்கையுடன், நாங்கள் நேர்மையாக முன்னேறி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

ஓராண்டு நிறைவு பெற்ற தை ஓட்டி மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றிமாறன் கலந்து கொண்டார் .

நிகழ்ச்சிக்கு வெற்றிமாறன் வந்ததால் விஜய்யின் கட்சியில் இணைந்து விட்டார் என்ற செய்திகள் வெளியாயின, ஆனால் அவர் தரப்பிலிருந்து எந்த தகவலும் இதுவரை அறிவிக்கவில்லை.

What do you think?

மரம் முறிந்து விழுந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி

மூன்றாம் திருமணம் செய்யும் அமீர்கான்