திருவாலங்காடு ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
திருவாலங்காடு வள்ளுவர் தெருவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு வள்ளுவர் தெருவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம்,நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து நேற்று முதல்கால யாகசால பூஜை நடைபெற்று கும்பாபிஷேக தினமான இன்று இரண்டாம் கால யாகசால பூஜை நிறைவுற்று பூரணாஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து பின்னர் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.