வெளிப்பட்டணம் ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டணம் தாயுமானவர் சுவாமி கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலயம் இங்கு ஸ்ரீ மகா கணபதி, பாலமுருகன், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக ஆலயத்தின் முன் அமைந்துள்ள குண்டத்தில் அக்னி வார்த்து யாகசாலை நடைபெற்று பூர்ணாகுதியும் சமர்ப்பிக்கப்பட்டது பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை மங்கள வாத்தியங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்து வானில் கருடன் வட்டமிட்டபடியே விமான கலசத்திற்கு அபிஷேகம் செய்து பின் பக்தர்கள் மீது தெளித்தனர்.
பின்னர் ஸ்ரீ சக்தி பகவதி அம்மனுக்கு பல்வேறு திவ்ய திரவங்களால் அபிஷேகம் நடைபெற்று கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது இதனை அடுத்து நான்கு கரங்களுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்த திருமேனியோடு மலர் மாலைகளுடன் விசேஷ அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ சக்தி பகவதி அம்மனை சுற்றுவட்டார பகுதியில் இருந்து பலரும் கண்டு மனம் உருகி வழிபாடு செய்தனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னப்பிரசாதமும் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் குடிமக்கள் மற்றும் பகவதி போஸ், பகவதி பிரவீன், கண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.