ஸ்ரீ மகா முத்து வராஹி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
சிங்கம்புணரியில் ஸ்ரீ மகா முத்து வராஹி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வேங்கைபட்டி ரோட்டில் புதிதாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாமுத்து வராகி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மகா கணபதி வழிபாடு கிராம சாந்தியுடன் துவங்கிய யாகசாலை பூஜைகள் சனி ஞாயிறு திங்கள் என ஐந்து கால பூஜைகள் நிறைவு பெற்றன.
அதைத்தொடர்ந்து ,இன்று காலை மங்கல இசையுடன் துவங்கி ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை புண்ணியகவாசனம் வேதிகாசனை ஸ்பர்சாகுதி நாடிசந்தானம் மூலமந்திர ஹோமம் அஸ்த்ர ஹோமம் ஜெயாதி ஹோமம் திரவியம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று மகாபூர்ணகுதியுடன் யாக வேள்விகள் நிறைவு பெற்றன.
அதைத்தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது அங்கு பக்தர்கள் குலவை ஒலி முழங்க மகாமுத்துவராகி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருள் பெற்று சென்றனர்.