in

பார்வதி நாயருக்கு தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்


Watch – YouTube Click

பார்வதி நாயருக்கு தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்

பார்வதி நாயருக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபருடன் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது, தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்த நடிகை ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

ஆஷ்ரித் என்ற சென்னையை சேர்ந்த தொழிலதிபரை பார்வதி நாயர் நேற்று நிச்சயம் செய்தார். விரைவில் இவர்களது திருமணம் தேதி அறிவிக்கப்படும் இவர்களின் Engagement போடோஸ் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இன்ஸ்டா…வில் புகைப்படங்கலுடன் பார்வதி நாயர் பகிர்ந்ததாவது, “பாசாங்கு நிறைந்த உலகில், நீ உண்மையானவனாக இருப்பதைக் கண்டேன். ஒவ்வொரு உயர்விலும் தாழ்விலும், நீங்கள் என்னுடன் நின்றீர்கள், வாழ்நாள் முழுவதும் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்கும் ,உங்கள் முடிவில்லாத அன்புக்காக – நன்றி. என் நம்ப முடியாதா ஆதரவாளர்களே நீங்கள் இல்லாமல் இந்தப் பயணம் ஒரே மாதிரியாக இருக்காது!” என்று கூறிபிட்டிருந்தார்.

பெங்களூரு டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது திருமணத் திட்டங்கள் மற்றும் தனது துணையைப் மனம் திறந்து பேசினார். ”

ஆரம்பத்திலிருந்தே ஆஷ்ரித் தனது நோக்கங்களில் மிகவும் தெளிவாக இருந்தார், காலப்போக்கில், அவர் தனது வார்த்தையின்படி நடப்பவர் என்பதை நான் புரிந்துகொண்டேன்,” தனது திருமணத்தைப் பற்றிப் பேசுகையில், திருமணம் சென்னையில் நடப்பதாகவும்.

மலையாளம் மற்றும் தெலுங்கு மரபுகளை ஒன்றிணைக்கும் வகையில் அவர்களின் திருமணம் இருக்கும் என்று தெரிவித்தார். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் இந்த வாரம் பிப்ரவரி 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கும். திருமணத்திற்குப் பிறகு, கேரளாவில் Reception நடக்கும் என்று கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

கபாலி தயாரிப்பாளருக்கு நடந்த துயரம்

விளம்பரத்தில் நடித்து சிக்கிய விக்னேஷ் சிவன்