காதலியை கரம் பிடித்த கிஷன் தாஸ்
தர்புகா சிவா எழுதி இயக்கி, 2022 ஆம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ என்ற படத்தில் கிஷன் தாஸ் மற்றும் மீதா ரகுநாத் நடித்தனர்.
இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிய செம ஸ்கோர் செய்தது. கிஷன் தாஸ் தற்பொழுது யூடியூபில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதைத் தாண்டி அவர் `நேர்கொண்ட பார்வை’, `சிங்க்’, `சிங்கப்பூர் சலூன்’ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியாக இருந்த தருணம் படம் சில சிக்கல்கள் காரணமாக வெளியாகவில்லை.
கிஷன் தாஸ் நீண்ட நாள் காதலியான சுசித்ரா ...வை கரம் பிடித்திருக்கிறார், இருவருக்கும் கடந்தாண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.