ரதசப்தமி உற்சவம் கருட வாகன புறப்பாடு
சூரிய ஜெயந்தி தினமான இன்று திருப்பதி மலையில் நடைபெறும் ரத சப்தமி உற்சவத்தின் மூன்றாவது வாகன புறப்பாடாக ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர் மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து கோவில் மாடவீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கருட வாகன புறப்பாட்டை கண்டு வழிபட்டனர்.