ரதசப்தமி உற்சவம் நான்காவது வாகன புறப்பாடாக அனுமந்த வாகன புறப்பாடு
சூரிய ஜெயந்தி தினமான இன்று திருப்பதி மலையில் நடைபெறும் ரத சப்தமி உற்சவத்தின் நான்காவது வாகன புறப்பாடாக உற்சவர் மலையப்ப சாமியின் அனுமந்த வாகன புறப்பாடு நடைபெற்றது.
ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை சூரிய பிரபை வாகன புறப்பாட்டில் துவங்கி முறையே சின்னசேஷ வாகனம், கருட வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளிய ஏழுமலையான் நான்காவது வாகன புறப்பாடாக அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை தொடர்ந்து மதியம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
அதன் பின் மாலை 3 மணி முதல் முறையே கற்பக விருஷ வாகன புறப்பாடு,சர்வ பூபால வாகன புறப்பாடு, சந்திரபிரபை வாகன புறப்பாடு ஆகியவை நடைபெற உள்ளன.