ரதசப்தமி உற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்.
சூரிய ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திருப்பதி மலையில் இன்று நடைபெற்ற வரும் ரதசப்தமி உற்சவத்தின் ஒரு பகுதியாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கோவில் திருக்குளத்தில் நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் இருந்து புறப்பட்டு வராகசாமி கோவில் முகமண்டபத்தை அடைந்த சக்கரத்தாழ்வாருக்கு அங்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்திற்குள் எடுத்துச் சென்ற அர்ச்சகர்கள் மூன்று முறை தண்ணீரில் மூழ்க செய்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தினர்.
அப்போது திருக்குளத்தின் நான்கு பக்கங்களிளும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.