நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளும் கோயிலுக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு
கும்பகோணம் அருகே நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முன்பு பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் தங்க கென்னடி தனது கையில் வேலுடன் அவரது தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளும் கோயிலுக்குள் செல்ல முயன்ற போது அவர்கள் அனைவரையும் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் தலைமையிலான போலீசாரால் கோயில் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் அங்கேயே சாலையில் அமர்ந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்ய முற்பட்டனர். இதனால் பாஜகவினருக்கும் போலீசாருக்கு கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு வேன்களில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சுவாமிமலை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்பு நிலவியது.