in

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 108 வேல்மாறல் வழிபாடு

உலக அமைதி வேண்டி நெல்லை மாவட்டம் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 108 வேல்மாறல் வழிபாடு நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேல்மாறல் பதிகம் பாடி சுவாமியை வழிபட்டனர்

முருகப் பெருமானின் அருளை மிக வேகமாக பெறுவதற்கு உதவும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் வேல்மாறல் மந்திரமாகும். எந்த ஒரு வேண்டுதலை வைத்து இந்த பதிகத்தை சொல்லி வந்தால் அனைத்து குறையும் நீங்கும் என்பது ஐதீகம் அதன்படி உலக நன்மை வேண்டி அறிவோம் ஆன்மீகம் இணையதள குழு சார்பில் நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைத்து வேல்மாறல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது

அதன்படி நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா மண்டபத்தில் வேலுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது தொடர்ந்து கோவில் பிரகாரம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அமர்ந்து வேல் வைத்து தங்களது குடும்ப பெயர்களை பிரார்த்தனை செய்து உலக நன்மை வேண்டி வழிபாடு நடத்தினர் தொடர்ந்து வேல்மாறல் பதிகம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது இதில் முன்னாள் மாநகராட்சி மேயர் புவனேஸ்வரி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

What do you think?

நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளும் கோயிலுக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு

பாளையங்கோட்டை ஸ்ரீஅழகியமன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் 2 கருடசேவை