in

பாளையங்கோட்டை ஸ்ரீஅழகியமன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் 2 கருடசேவை

நெல்லை மாவட்டத்தில் ரதஸ்ப்தமியை முன்னிட்டு பாளையங்கோட்டை ஸ்ரீஅழகியமன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் 2 கருடசேவை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில், சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் வட திசை நோக்கி பயணிக்கும் உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாத சப்தமி தினம் ரத சப்தமி விழா என கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் வைணவ திருத்தலங்களில் சிறிய பிரம்மோற்சவம் போல் விழத நடைபெறும். அதாவது பெருமாள் ஒரே நாளில் பல்வேறு வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இத்தகைய ஒரு நிகழ்வாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீஅழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் ஆணடுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.

அதன்படி இந்த ஆண்டுக்காண ரத சப்தமி திருவிழா இன்று காலை ஆரம்பமாயிற்று. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீ ராஜகோபாலா் முதலில் சூா்யபிரபை வாகனத்தில் ஏழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிகொடுத்தாா். கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டதும் மாடவீதி புறப்பாடு நடைபெற்றது.

2வது வாகன சேவையாக ஸ்ரீராஜகோபாலா் மற்றும் ஸ்ரீஅழகியமன்னாா் ஆகியோருக்கு கருட சேவை நடைபெற்றது. இதற்காக இரண்டு கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ராஜகோபாலர் மற்றும் அழகிய மன்னார் எழுந்தருள குடைவாயில் தீபாராதனையுடன் 2 பெருமாள்களின் வீதி உலா நடைபெற்றது. திருவீதி உலாவில் பக்தர்கள் கோலாட்டம் அடித்தும் பஜனைகள் பாடியபடி சென்றனர். அதனை தொடா்நத ஆதிஷேஷன் வாகனமும் மதியம் திருமஞ்சனமும் மாலையில் இந்திர விமானம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் இரவில் சந்திரபிரபை வாகன புறப்பாடு நடைபெற்றது. காலை முதல் நாள் முழுவதும் பெருமாள் வீதி புறப்பாடு தொடா்ந்து நடைபெற்று வந்ததால் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

What do you think?

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 108 வேல்மாறல் வழிபாடு

144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் புறநகர் பகுதியில் வரக்கூடிய வாகனங்கள் பலத்த சோதனை