தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவது மோடிக்கு பிடிக்கவில்லை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் பேச்சு
தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவது மோடிக்கு பிடிக்கவில்லை எனவும் பாமர மக்களின் கடனை தள்ளுபடி செய்ய தயங்கும் மோடி அம்பானி அதானி போன்றவர்களுக்கு பல்லாயிரம் கோடிகளை தள்ளுபடி செய்கிறார் எனவும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் பேச்சு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிபாறை அடிவாரபகுதியில் மலைவாழ் மக்கள் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .
இந்த நிலையில் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்களுக்கு கம்பளிப் போர்வை மாணவ மாணவிகளுக்கு கல்வி தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார். இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர்.
இந்தியாவில் அனைவரும் சமமே நம்மை பிரித்தாலும் முயற்சிகளை மோடி செய்து வருகிறார் எனவும் மக்கள் கைகளில் பணப்புழக்கம் இருந்தால் மட்டுமே இந்தியா வல்லரசு நாடாக ஆக முடியும் எனவும் மக்களை மோடி அரசு கண்டு கொள்வதில்லை எனவும் மக்களிடமிருந்து சுரண்டி அதானே அம்பானி போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வாரி வழங்குவதாகவும் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய 28 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசின் நிறுத்தி உள்ளதாகவும்
கடந்த ஆட்சி காலத்தில் ஐந்தாவது இடத்திலிருந்து தமிழகம் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் தமிழகம் வளர்ச்சி பெறுவது மோடிக்கு பிடிக்கவில்லை எனவும்
கோயிலுக்கு சென்று சாமி கும்பிட வேண்டிய அவசியமில்லை நமது மனது தான் கடவுள் என்றும் கடவுள் ஆசீர்வதிப்பார் எனவும் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.