அக்கார்டு ஹோட்டல்களின் ஊழியர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி
அக்கார்டு ஹோட்டல்களின் ஊழியர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. போட்டியினை சமையல்களை நிபுணர் வெங்கடேஷ் பட் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி, சென்னை மற்றும் பெருநகரங்களில் உள்ள அக்கார்டு ஹோட்டல்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் இன்று நடைபெற்றது.
துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஐந்து அணிகள் பங்கேற்றன. போட்டிகளை சமையல் கலை நிபுணர் வெங்கடேஷ் பட்டு துவக்கி வைத்தார்.
தங்களது நிறுவனத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த போட்டியை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.