சிவகார்த்திகேயன் மகனுக்கு காதணி விழா
சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா, குகன் தாஸ், 3ஆவதாக பவன் என்ற மகன் பிறந்தார்.
சிவகார்த்திகேயனின் மூன்றாவது மகனுக்கு காது குத்தும் திருவிழா சிறப்பாக நடந்தது.
சிவகார்த்திகேயன் தன்னுடைய மகனுக்கு காது குத்தும் விழாவினை திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவீழிமிழலையில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு தன் குடும்பத்தினருடன் சென்று தனது மூன்றாவது மகன் பவனுக்கு உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் காதணி விழா நடத்தியுள்ளார்.
விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன.