அக்டோபரில் ரிலீஸ் ஆகும் கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ், தயாரிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமான கூலி படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் ஜூனியர் எம்ஜிஆர் ஆகியோருடன் இணைந்து நடிக்கின்றனர்.
கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டு ஸ்டாண்டர்ட் மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் மட்டும் அல்லாமல் கூடுதலாக, தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் மற்றும் பாங்காங்கில் சூட்டிங் முடிந்த நிலையில் அக்டோபர் பத்தாம் தேதி படத்தினை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ்.