மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலய தை கடை வெள்ளி பால்குட அபிஷேக அன்னதான விழா
மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலய தை கடை வெள்ளியை முன்னிட்டு பால்குட அபிஷேக அன்னதான விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வண்டிக்கார தெருவில் அமைந்துள்ள பிரசன்ன மாரியம்மன் ஆலய தை கடை வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் இருந்து சக்தி கரகம் பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் தலையில் சுமந்து வந்த பாலினை கொண்டு அம்மனுக்கு பால் அபிஷேக ஆராதனையும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது பிரசன்ன மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.