கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
66 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தளங்களில் ஒன்றான டவுன் கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக அமைந்துள்ள நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நிறைவு பெற்று 66 ஆண்டுகள் கடந்துள்ளது இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோவிலை புனரமைப்பு செய்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பணிகள் நிறைவு பெற்ற சூழலில் மகா சம்ப்ரோக்ஷண விழா கடந்த ஆறாம் தேதி பகவத் பிரார்த்தனை உடன் தொடங்கியது தொடர்ந்து அக்னி பிரதிஷ்டை யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்று இன்றைய தினம் காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி காலை முதல் பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு நான்கு நாட்களாக யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட மகா கும்பங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
தொடர்ந்து கோவில் மூலவர் விமானத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது தொடர்ந்து கலசத்திற்கு பட்டு அவசரங்கள் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது தொடர்ந்து மூலவர் கரியமாணிக்க பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.