அஜீத் சார் கொடுத்த ஐடியா படித்தான் இந்த படத்தை எடுத்தேன்.. மகிழ்திருமேனி Open Talk
மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான விடாமுயற்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற குறை ஒரு பக்கம் இருக்க அஜித்தின் படம் போல் மகிழ்திருமேனி உருவாக்கவில்லை என்றும், அஜித்தை வைத்து மகிழ்திருமேனி இனி படம் இயக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
ரசிகர்களின் நெகடிவ் comments குறித்து இயக்குநர் மகிழ்திருமேனி கூறுகையில் அஜித்தை வைத்து நான் இயக்கப் போகின்றேன் என தகவல் வெளியான உடனே ரசிகர்கள் இது ஒரு ஆக்ஷன் thriller படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள் .teaser வெளியான போதும் அப்படித்தான் நினைத்தார்கள் .
பிறகு பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என்றும் இந்த படத்தின் கதை என்னுடைது அல்ல , அஜித் கொடுத்த ஐடியா என்று கூறியவுடனே ரசிகர்களின் ஆர்வம் குறைந்து விட்டது .இவ்வளவு பெரிய நடிகர் மாசாண(mass) சீன்களில் நடிக்கவில்லை என்பது பாராட்டுகூறி விஷயம் என்றாலும் நான் அஜீத்..தை வைத்து ஆக்சன் படம் எடுக்க ஆசைப்பட்டது.
உண்மைதான் ஆனால் அவர் என்னிடம் ஊரை காப்பாற்றும் கதை, நாட்டை காப்பாற்றும் கதை எல்லாம் வேண்டாம் ஒரு சிம்பிளான எதார்த்தமான படத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் அனைத்து தரப்பு ரசிகர்களும் அந்த படத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்படி ஒரு படத்தை மட்டுமே செய்வோம் என்று சொன்னார் இந்த படத்தை கவனித்தால் மிகப்பெரிய ஸ்டார்…ருக்கு உண்டான எந்த பில்டப்பும் இல்லை .
ஒரு சாதாரண மனிதன் என்ன செய்வாரோ, பிரச்சனை வந்தால் எப்படி எதிர்கொள்வாரோ அப்படித்தான் இந்த படத்தில் அவரை நான் காட்டியிருக்கிறேன் அப்படி நடிக்கும் பொழுது அவர் இமேஜ் அடி வாங்கும் என்று எனக்கு தெரியும் ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை கதைக்கு எது தேவையோ அதை மட்டும் செய்யுங்கள் என்று கூறிவிட்டார்.அஜீத் விருப்பதிற்காக எடுக்கபட்ட படம் இயக்குனரை குறை சொல்வதில் அர்த்தமில்லை.