in

சிவகங்கை அருகே பால்குடம் சுமந்து 500 க்கும் பக்தர்கள் நேர்த்திக்கடன் 

சிவகங்கை அருகே பால்குடம் சுமந்து 500 க்கும் பக்தர்கள் நேர்த்திக்கடன் 

 

சிவகங்கை அருகே தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோயில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பால்குடம் சுமந்து 500 க்கும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே பிரண்டைக்குளம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோயிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஊர் எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பால்குடத்தை தலையில் சுமந்து வந்து கோயிலை வந்தடைந்து நேற்றிக்கடன் செலுத்தினர்.

பின்னர் மூலவர் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் சுவாமிக்கு சந்தனம், பலரசம், திருநீர், தயிர், இளநீர் அபிஷேகங்கள் நடைபெற்ற பக்தர்கள் சுமந்து வந்த பாலைக் கொண்டு பால் அபிஷேகம் பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு இடையே வெகு விமர்சியாக நடைபெற்றது.

தொடர்ந்து சங்காபிஷேகம், புனித கலச நீர் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று மூலவர் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபம், கும்ப தீபம், உள்ளிட்ட பல்வேறு தீபாரணைகள் காட்டப்பட்டது.

இந்த தைப்பூச பால்குடம் விழாவினை பிரண்டைக்குளம், பனங்காடி, அல்லூர், நாட்டாரசன்கோட்டை, கொல்லங்குடி, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயில் தைப்பூச தீர்த்தவாரி

மருதூர் வள்ளலார் அவதார இல்லத்தில் சன்மார்க்க அன்பர்களும் பக்தர்கள் வழிபாடு