மருத்துவமனையில் போராட்டம் நடத்திய நடிகர் கஞ்சா கருப்பு
அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் இல்லை எனக் கூறி கஞ்சா கருப்பு போராட்டம். சென்னை போரூர் அடுத்த சின்ன போரூரில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு சுற்று வட்டாரத்தில் இருந்து ஏகப்பட்ட மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர்.
நேற்று சிகிச்சைக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் போதிய டாக்டர்கள் இல்லை என கூறப்பட்டு ஓபி..யில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்தனர் இதனால் அங்கிருந்து நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடிகர் கஞ்சா கருப்பு கால் வலிக்காக சிகிச்சை பெற அந்த மருத்துவமனைக்கு வந்தார்.
அவரும் நீண்ட நேரம் காத்திருந்து பொறுமை இழந்தவர் அங்கிருந்து மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் போதிய டாக்டர்கள் இல்லாததை கண்டித்து கஞ்சா கருப்பு நோயாளிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.