சிவகங்கை ஸ்ரீ பிள்ளைவையல் காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
சிவகங்கை ஸ்ரீ பிள்ளைவையல் காளியம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மிகப் பழமையான இக்கோவிலை புனரமைத்து திருப்பணிகள் நிறைவு பெற்றது அடுத்து கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது கோவில் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து கடந்த நான்கு நாட்களாக ஆறு காலயாக பூஜையுடன் துவங்கியது தொடர்ந்து யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் பட்டு சேலைகள் பழங்கள் சமர்ப்பித்து பூர்ணாகுதி அளிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க விமான கலசங்களுக்கும் மூலவர் அம்மனுக்கும் கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன.
பின்னர் அம்மனுக்கு பல்வேறு நறுமண திரவியங்கள் கொண்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வண்ண புதுப்பட்டு சேலை அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றன.
இதனை அடுத்து அம்மனுக்கு உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீபிள்ளை வயல் காளி அம்மனை வழிபாடு செய்தனர் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.